அவளும்.. அவர்களும்.. அவைகளும்..2

Being an average…sin?!

சாதனை.. வெற்றி.. முதலிடம்.. the most misinterpreted terms! இல்லையா?

விருதுகளும் அங்கீகாரங்களும் மட்டுமே ஒருவரின் வாழ்க்கையை முழுமையடையச் செய்திடுமா?

இல்லை ஒருத்தரோட வெற்றிய இதுக்குள்ள அடக்கிடத்தான் முடியுமா?

ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கறவங்கதான் அறிவாளிங்கற கண்றாவி லாஜிக்கோட continuation-அ தான் தோணுது.

நாம வெற்றினு நினைக்கற பல விஷயங்கள சிலர் அடைஞ்சப்பறமும் தோல்வியுற்றதாதான் ஃபீல் செஞ்சிருக்காங்க. அதே சமயம் நாம failure modelனு நினைக்கற lifestyle அதாவது வாழ்க்கைமுறைய சிலர் திருப்தியோட வாழறதையும் பார்த்துருப்போம்.

ரொம்ப சின்ன வயசுல நான் முதல்ல வந்தப்போ சந்தோஷப்பட்ட அதே அம்மா.. அதே சந்தோஷமான முகம்.. நான் அம்பது பெர்ஸண்டோட வரும்போதும் இருந்தது.. i was wondering.. ஏன் உனக்கு கோவமே வரலையானு

All that she said to me is… நீ உன்கிட்டயே கேட்டு பாரு… உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேனு..

கேட்கறதுக்கு ரொம்பவே சாதாரணமா தோணினாலும் உண்மைல கேட்கும்போதுதான் அதோட அர்த்தம் புரிஞ்சது.

எனக்கு என்ன வேணும்? எனக்கு தெரிஞ்சதுலேயே இதுதான் ரொம்பவே ஆழமான கேள்வி.

இதுதான் நான்.இதுக்காகத்தான் நான் ஓடறேன்.இதுதான் எனக்கு வேணும். இப்படி எதுவுமே தெரியாதப்போ என்கிட்ட நானே கேட்ட கேள்வி.

Back to the topic..

தேசிய விருதோ ஆஸ்கர் ஆவார்டோ வாங்கறதுதான் ஒரு கலைஞனோட வெற்றியா?

முதலிடம்ற ஒரு கட்டத்துக்குள்ள எல்லாரையும் அடைக்கனும்னு நினைக்கறது நியாயமா?

எந்த அளவுகோல வச்சு தனித்துவத்த அளவிடுவீங்க?

இந்த பத்தாவதா பன்னெண்டாவதா வர்றவங்களாம் தோத்துப் போனவங்கனு யார் முடிவு செய்றது?

ஒருத்தரோட பார்வைக்கு ஒன்னுமேயில்லாததா தெரியற அதே விஷயம் இன்னொருத்தரோட பார்வைக்கு அதிசயம்! நம்ம taste & preferenceக்கு ஏத்தா மாதிரி நாம ஒன்ன செலக்ட் செய்றோம்.. அதுக்காக மத்ததெல்லாம் வர்த் இல்லைனு ஆகிடுமா?

அதேபோலத்தானே…

My success = My satisfaction
அதாவது திருப்தி!!

எவ்வளவு பெரிய வெற்றியா மத்தவங்களுக்கு தெரிஞ்சாலும் அதுல திருப்தி இல்லன்னா வெற்றிக்கூட தோல்விதான்.

இதையேதான் சாத்வா லஹரிக்கும், யாழி ராகவ்க்கும், முகி சந்தியாட்டயும் சொல்வாங்க.. அதாவது you need not be successful for others.. மத்தவங்க பார்வைல நீ தோத்துப்போனவனா.. ஆவரேஜானவளா.. சாதனைகளற்ற சராசரி வாழ்க்கை வாழ்ந்தாலும் நீ அதுல சந்தோஷப்பட்டா.. முழு திருப்தியோட வாழ்ந்தா நீ ஜெயிச்சுட்டனு.. “வாழ்றனு” அர்த்தம்.
மத்தவங்க பார்வைக்கு எப்படியோ.. ஆனா நீ நீயா இருனு.

இப்ப சொல்லுங்க.. being an average is a sin??

Leave a comment