மென்சாரலில் நின்வண்ணமோ..!?-3

3 ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும் பூமரங்கள், சாமரங்கள்... வீசாதோ கடந்துச் செல்லும் காரிலிருந்து கசிந்த பாடல் வரிகளில் உள்ளத்தில் இனம்புரியா இதமொன்று பரவியது மேகாவிற்கு. இந்த பாடலை எத்தனை முறை கேட்டிருப்பாள்..? இருந்தும் ஏனோ, ஒவ்வொரு முறையும் முதல் முறையில் தந்த அதே உணர்வை அள்ளி அள்ளி தருகிறது இந்த இசையெனும் அமுதம் மட்டும். இதமான [...]

மென்சாரலில் நின்வண்ணமோ..!?-2

2 புத்தம் புது காலை பொன் நிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம் கேட்க கேட்க தெவிட்டாமல், தித்தித்திப்பாய் இரு காதுகளையும் ஆக்கிரமித்திருந்த ஹெட்ஃபோனுக்குள் அமுதமாய் ஒலித்தது ஜானகியின் குரல். ஆங்காங்கே தேகத்தில் வேர்வையால், அணிந்திருந்த டீஷர்ட்டின் முதுகுபுறம் ஈரமாகிவிட்டதை உணர்த்த அதை லட்சியம் செய்யாதவளாய் அந்த பூங்காவை இன்னொரு முறை சுற்றி வந்தாள் தென்னல். யெஸ்!! சரளமாய் மலையாளம் பேசும் தென்றல்..இல்லை தென்னல்! வழமையாய் சுற்றுவதைவிட இன்று சற்று [...]

மென்சாரலில் நின்வண்ணமோ..!?-1

1 ஹே ஹோ ஹூம்... ல ல லா... பொன்மாலை பொழுது இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள், நாணுகிறாள் வேறு உடை, பூணுகிறாள் இது ஒரு பொன்மாலை பொழுது ம்ம்ம்ம் ஹே ஹா ஹோ... ம்ம்ம்... துள்ளலாய் செவி நிறைக்கும் எஸ்.பி.பியின் குரலில் தாமாய் மலர்ந்தது அதியின் இதழ்கள் இரண்டும். எத்தனை பொருத்தமான பாடல்?! ஒரு முறை சன்னல் வழியாய் வெளியே பார்த்துக்கொண்டான். உண்மையிலேயே அது ஒரு பொன்மாலைப் பொழுதுதான். வானமகள் கொஞ்சம் கொஞ்சமாய்.. மஞ்சள் [...]

அவளும்.. அவர்களும்.. அவைகளும்..2

Being an average...sin?! சாதனை.. வெற்றி.. முதலிடம்.. the most misinterpreted terms! இல்லையா? விருதுகளும் அங்கீகாரங்களும் மட்டுமே ஒருவரின் வாழ்க்கையை முழுமையடையச் செய்திடுமா? இல்லை ஒருத்தரோட வெற்றிய இதுக்குள்ள அடக்கிடத்தான் முடியுமா? ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கறவங்கதான் அறிவாளிங்கற கண்றாவி லாஜிக்கோட continuation-அ தான் தோணுது. நாம வெற்றினு நினைக்கற பல விஷயங்கள சிலர் அடைஞ்சப்பறமும் தோல்வியுற்றதாதான் ஃபீல் செஞ்சிருக்காங்க. அதே சமயம் நாம failure modelனு நினைக்கற lifestyle அதாவது வாழ்க்கைமுறைய சிலர் திருப்தியோட வாழறதையும் [...]

அவளும்.. அவர்களும்.. அவைகளும்..

'அண்ணா..ஈ நோட் கித்தோகிதே..' என்று தயக்கமும் மென்மையுமாய் என் செவி தீண்டிய குரலில் படிகிறது என் கவனம், என்னருகில்..பக்கத்து கௌண்டரில் இருந்தவரை விளித்துவிட்டு அந்த இருபது ரூபாய் நோட்டை முன்னும் பின்னுமாய் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்த பையனிடம். அவனேதான்! சற்று முன்வரை எங்களுக்கு முன் நின்றிருந்தவன். இரண்டு எண்ணை பாக்கெட்டுகளுடன் சேர்த்து இன்னபிற சாமான்களை கையில் வைத்திருந்த அந்த வையர் கூடையினுள் போட்டுக்கொண்டு சில்லறையை சரியாய் கணக்கிட்டு பில்லுடன் வாங்கிச் சென்ற அதே பையன். சில மணி [...]